12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவ ரூபங்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவ ரூபங்கள் பற்றிய பதிவுகள் :



மேஷம் :

மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். விருச்சிக ராசிக்காரர்கள் திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

ரிஷபம் :

திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம் :

திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பூஜைப்பொருட்களுடன்  கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம் :

கடகத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு வேலூரில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல், திருக்கடையூர் போன்ற ஊர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் சென்று வழிபட்டு வரலாம். அப்படி வழிபட முடியாதவர்கள் பிடித்த சிவாலயங்களுக்கு சென்று பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பூஜைப் பொருட்களும், பாலும் கொடுத்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம் :

சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவனுக்கு மிகவும் விருப்பமானவர்கள். நீங்கள் திருவண்ணாமலை அல்லது சிதம்பரம் போன்ற இடத்தில் அமைந்திருக்கும் எம்பெருமானை வழிபட நல்லது நடக்கும். அங்கு செல்ல முடியாதவர்கள். பாலில் சிவப்பு சந்தனம் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்ய நன்மைகள் உண்டாகும். 

கன்னி :

கன்னி ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வணங்கினால் நல்லது நடக்கும். முடியாதவர்கள் பிடித்த சிவாலயத்தில் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து சிவனுக்கு தேவையான பூஜை பொருட்களை தானம் செய்யலாம்.

துலாம் :

துலாம் ராசியில் பிறந்தவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்தில் அடிக்கடி பாலாபிஷேகம் செய்து வர நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதரையும், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம், சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் வழிபட நிறைய நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு பிடித்த அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று பூஜை பொருட்களுடன், வெல்லம் கலந்த நீரை நிவேதனம் செய்து வர நல்லது நடக்கும். உங்கள் ராசிக்கு வேலூர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட அதிர்ஷ்டம் பெருகும்.

தனுசு :

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தாலே பெரும் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் ராசிக்கு திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபடுவது. அதிர்ஷ்டத்தை தரும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருக அருகில் இருக்கும் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து, பூஜை பொருட்களை மற்றும் அபிஷேகத்தை செய்வதன் மூலம் நிறைய நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காஞ்சியில் வீற்றிருக்கும் ஏகாம்பரேஸ்வரரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும். 

கும்பம் :

கும்ப ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதரையும், சிதம்பரம் கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் வணங்கி வந்தால் நல்லது நடக்கும். அவ்வாறு முடியாத பட்சத்தில் சிவாலயங்களுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது யோகத்தை தரும்.

மீனம் :

மீன ராசியில் பிறந்தவர்கள் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில் மற்றும் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் எம்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும். பிடித்த சிவாலயங்களுக்கு சென்று குங்குமப்பூவுடன் கலந்த பாலில் அபிஷேகம் செய்வது, பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நன்மைகளை உண்டாக்கும்.

எந்த ராசியில் பிறந்தாலும் அருகிலிருக்கும் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் வீட்டில் இருக்கும் கஷ்ட நிலை மாறும் என்பது ஐதீகம். 

சிவாலயங்களில் பூஜை பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும், அபிஷேகங்கள் செய்வதும் அதிர்ஷ்டத்தை பெருகச் செய்யும். உங்களுக்கு துன்பம் வரும் பொழுது எல்லாம் ‘ஓம் நமச்சிவாய’ என்று தொடர்ந்து 108 முறை உச்சரித்தால் வந்த துன்பம் எல்லாம் பறந்து ஓடுவதை நீங்களே பார்க்கலாம்.

சிவலிங்கத்துக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நல்லது. வீட்டிலேயே பூஜை செய்பவர்கள், பூஜைப் பொருட்களுடன்  வில்வப் பழம் வைத்துப் படைத்தால், நினைத்த காரியம் கைகூடும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post