செவ்வாய் பகவானை பற்றிய சிறப்பான தகவல்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செவ்வாய் பகவானை பற்றிய சிறப்பான தகவல்கள் :

9, 18, 27-ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும். அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.

அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

ஆலயங்களில் நெய்தீபம் ஏற்ற உதவி செய்தலும் ஆலயத் திருப்பணிக்கான கட்டிட புனருத்தாரணப் பணிகளுக்கு பொருள்உதவி செய்வதும் கூட செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கான பரிகாரங்களாகும்.

இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய்குரியன.

இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.

ஒரு மனிதனின் ஆற்றல் செவ்வாய் ஜாதகத்தில் அமைந்த விதத்தில்தான் அமையும். காவல் துறை, ராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்.

சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

சூரியனிடமிருந்து சுமார் 15 கோடி மைல் தூரத்தில் செவ்வாய் உள்ளது. செந்நிற ஆடையையே செவ்வாய் பகவான் விரும்பி அணிவார்.

செவ்வாயால் உஷ்ணக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் தாக்கப்பட்டுக் காயம் உண்டாகுதல், அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை சிகிச்சை செய்து கொள்வதனால் தொல்லைக் குள்ளாதல் போன்றவை ஏற்படும்.

செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷமும் விருச்சிகமுமாகும். செவ்வாய் அங்காரகன்- குஜன்- சேய் எனவும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவான் பூசித்த தலங்கள் பல.

செவ்வாய் ஒரு ஆண் கிரகம். செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு. செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர்.

செவ்வாய் கிழமைக்கும்,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை. செவ்வாய் சகோதரர்களுக்குக் காரகம் பெற்றவர். செவ்வாய் சிவப்பு நிறம். செவ்வாய் தாது கிரகம்.

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப் படுதல், பூர்வீக பூமியை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவை களுக்கும் காரணமாகி விடும்.

செவ்வாய் தோஷக் காரர்கள் காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க் கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மவுனம் இருக்க வேண்டும்.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம்.

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும்.

செவ்வாய் தோஷம் பரம்பரையாக வரும் தன்மை கொண்டது. செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகாரம் செய்வது சிறப்பு.

செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். செவ்வாய்க்கிழமை இவரின் கிழமை, இது இரு கண்களும் இல்லாத குருட்டு கிழமை எனப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கிரகங்களாகும். செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு.

தண்டபாணியாக முருகன் விளங்கும் கோலம் உள்ள ஆலயங்கள் செவ்வாய் தோஷத்தை விரைவில் தீர்க்கும். தமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்திரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.

திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும். துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம்.

நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் ‘காயத்ரி’ மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வருதலும் செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும். நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும்.

பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும்.

புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயைப் போற்றி வணங்குகிறார். மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துபவன் செவ்வாயே லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது.

விஷ்ணு சகஸ்ரநாமம் ஞாயிறு நண்பகல் பாராயணம் செய்து சர்க்கரை பொங்கல் விநியோகம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.


Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post