சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 5 வகை ஸ்நானங்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 5 வகை ஸ்நானங்கள் பற்றிய பதிவுகள் :

1. வாருணம்

ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான் ஜலத்தில் குளிப்பது 'வாருணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே, இதுவே முக்ய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பக்ஷம்தான்.

2. கெளண ஸ்நானங்கள்

 இதற்கப்பறம் வருவது தான் 'கெளண'மாக கழுத்துவரை குளிப்பது, இடுப்புவரை குளிப்பது போன்றவை. ஆனால் இந்த கெளண ஸ்நானங்கள் எல்லாம் ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான். இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும் போது விபூதி ஸ்நானம் செய்து கொள்ளுவார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை, ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். 

3. கோ-தூளி

அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்ற்கு சொல்கிறோம். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கிறது. கோ தூளி என்று பெயர். ஸ்ரீக்ருஷ்ணனே இந்த பசுக்களில் தூள் சந்தனப் பொடி தூவினார் போல தனது உடம்பில் படிந்தபடி 'கோதூளீ தூஸரிதனாக' இருந்தானாம். 

இவ்வாறான 'கோ-தூளி' நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம், இதன் பெயர் 'வாயவ்யம்'. இது வாயுவுடன் ஸம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

4. திவ்ய-ஸ்நானம்

அபூர்வமாக சில சமயங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழிகிறதல்லவா, இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்திற்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது'திவ்ய-ஸ்நானம்' என்று பெயர். இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

5. ப்ராஹ்ம ஸ்நானம்

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம்மிது தெளிப்பர். சந்தியா வந்தனத்தில் 'ஆபோ ஹி ஷ்டா' சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை, 

இதன் பெயர் 'ப்ராஹ்மம்'. 'ப்ரம்மம்' என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோஷணத்திற்கு 'ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post