பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதன் கிடைக்கும் பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதன் கிடைக்கும் பலன்கள் பற்றிய பதிவுகள் :

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால், பெரும் இடையிறுகள் நீங்கும் வாய்ப்பு வரும். கடன் தொல்லை தீரும்; கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள்.

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை - 3.30 am to 6.00 am. குறிப்பிட்டு கூறினால் சூரிய உதயத்திற்கு முன் 48 நிமிடத்திற்கு முன்னால் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.

அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி.

அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவது நல்லது. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லுகிறார்கள்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான், தேவர்களும் பித்ருக்களும் நம் இல்லங்களுக்கு வருவார்கள் என்பதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாம் தூங்கிக் கொண்டிருந்தால், வரவேற்காமல் இருக்கிறார்களே என்று அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாம்.

எனவே, தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டுக்கொண்டு வாசல் கதவை திறந்து இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர் கூற்று .

பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில். அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். 

காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

மேலும் வீட்டில் அதுவரை இருந்த கஷ்ட நிலையெல்லாம் மாறும். கடன் தொல்லை யெல்லாம் தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து வழிபடுவது மிக்க சிறப்பை தரும் .
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post