தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்ட உதவும் தூபம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்ட உதவும் தூபம் பற்றிய பதிவுகள் :

தீய எண்ணங்கள் மற்றும் கண் திருஷ்டி ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பல முறைகளை கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான், மிகவும் சக்தி வாய்ந்த தூபப் புகை போடும் முறை.

இதில் குறிப்பிட்டுள்ள தூபத்தை அமாவாசை அன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள் மாதம் ஒரு முறை மட்டுமே போட வேண்டும்.

தூபம் போட தேவையான பொருள்கள் 

1.வேப்பிலை பொடி.
2.காயவைத்து அரைத்த எட்டி பொடி.
3.பெரிய நெல்லிக்காய் பொடி
4.கோமியம்
5.தயிர்
6.மாவிலை

சாம்பிராணி போடும் கிண்ணத்தில் நன்கு கொட்டாங்குச்சியை நெருப்பு வைத்து எரித்து செந்நிறமாகும் வரை எரிய விட வேண்டும்.

பின் வேப்பிலை பொடி , அரைத்த எட்டி பொடி இரடையும் கலந்து எரிந்து கதகதவென இருக்கும் கொட்டாங்குச்சியில் போட்டு விட வேண்டும். 

புகை போடுவதற்கு முன் கதவு சன்னலை மூடி வீடு அனைவரும் வெளியே சென்று விட வேண்டும். 

ஒருவர் மட்டும் உள்ளே இருந்து  தூபம் போட்டு விட்டு வெளியே  வந்து விட்டு கதவை மூடிவிட வேண்டும். 

1/2 மணி நேரம் கழித்து அனைத்து கதவு ஜன்னலையும் திறந்து விட்டு புகையை வெளியேற்ற வேண்டும், 

பின் அடுத்த நாள் காலையில் எழுந்து கோமியத்தில் தயிர், நெல்லி பொடி கலந்து மாவிலை மூலம் அந்த கோமியத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். 

ஒரு மாதத்தில் இதை ஒரு முறை செய்தாலே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

இதனை செய்வதன் மூலம் கெட்டசக்தி, கெட்ட எண்ணங்கள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மற்றும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post