ராகு கால வழிபாட்டு சூட்சமம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராகு கால வழிபாட்டு சூட்சமம் பற்றிய பதிவுகள் :

திங்கட்கிழமை ராகு கால பூஜை பலன் :

திங்கள் கிழமை இராகு கால நேரம் இரவு 7.30 - 9 மணி. திங்கட் கிழமையில் ராகு கால பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய்க் கிழமை இராகு கால பூஜை பலன் :

செவ்வாய்க் கிழமை இராகு கால நேரம் மாலை 3- 4 மணி. செவ்வாய்க் கிழமையில் ராகு கால பூஜை செய்து அம்பாளை நினைத்து தியானம் இருந்தால் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கான திருமண தோஷம், பிதுர் தோஷம், உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும்.

புதன் கிழமை இராகு கால பூஜை பலன் :

புதன் கிழமை இராகு கால நண்பகல் 12 - 1 மணி. புதன் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர உங்கள் தொழிலில் இருக்கும் எதிரிகள், உங்களை அண்டாமல் காக்கப்படுவீர்கள்.

வியாழன் கிழமை இராகு கால பூஜை பலன் :

வியாழன் கிழமை இராகு கால மதியம் 1.30 - 3 மணி. வியாழன் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர உங்களின் தெய்வத்தின் அருளும், குரு அருளும் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமை இராகு கால பூஜை பலன் :

வெள்ளிக் கிழமை இராகு கால காலை 10.30 - 12 மணி. வெள்ளிக் கிழமையில் ராகு கால பூஜை செய்துவர உங்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமையில் ராகு கால பூஜை செய்து எடுத்து வரும் எலுமிச்சை பழத்தின் மேல் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி போட, வீட்டில் மங்களம் நிலைக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post