ஆலய வழிபாட்டு முறைகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலய வழிபாட்டு முறைகள் பற்றிய பதிவுகள் :

1. ஆலயத்திற்கு செல்லும் போது அங்குள்ள குளத்தில் அல்லது நீர்நிலைகளில் குளித்துவிட்டு அல்லது கை, கால்கள் கழுவிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

2. வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. எக்காரணத்தைக் கொண்டும் காலைக்கடன்களை முடிக்காமலும், குளிக்காமலும் கோயிலுக்குள் செல்லக் கூடாது. இது சுய ஒழுக்கம் மட்டுமின்றி ஆலய புனிதத்தையும் பாதிக்கும்.

4. ஆலயத்திற்குள் சென்றதும் முதலில் கோபுரத்தைமும், பின் கொடிமரத்தையும் வணங்க வேண்டும்.

5. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

6. கோயில் கோபுரத்தை ஆண்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் வழிபட வேண்டும். பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் வழிபட வேண்டும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு போன்றவை அணிந்து கொண்டு ஆலயத்திற்குள் செல்லக்கூடாது. மேலும் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

8. ஆண்கள் வேஷ்டி, சட்டையும் மற்றும் பெண்கள் புடவை கட்டிக்கொண்டு மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல முயற்சி செய்யுங்கள்.

9. ஆலயத்தின் மூலவரை தரிசிக்கும் போது ஆண்கள் கண்டிப்பாக மேலாடை அணியக்கூடாது.

10. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

11. எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அங்கு பூஜிக்கப்படும் சிலைகள் தொட்டு வணங்கக் கூடாது.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால் முதலில் விநாயகர், பரிவார மூர்த்திகள் மற்றும் நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை இரு கைகளால், தலையில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும். 

15. கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களில் கண்டிப்பாக தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும். ஆண்கள் அனைவரும் தலை, மார்பு, வயிறு மற்றும் முழங்கால்கள் அனைத்தும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

18. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

19. மந்திரங்கள் மற்றும் துதி பாடல்கள் பாட தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.

20. நமது இரு கரங்களையும் நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும். 

21. நாம் ஜெபிக்கும் மந்திரம் அடுத்தவர்கள் ஜெபிக்கும் மந்திரத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது. இதனால் மந்திரத்தை மனதிற்கு ஜெபிப்பது போதுமானது.

22. நந்தியின் காதில் ரகசியம் செல்கிறேன், என்ற பெயரில் உங்கள் நாவிலுள்ள எச்சிலை சிலையின் மீது தெளிக்காதீர்கள். இது முற்றிலும் தவறானது. தியானத்தின் இருக்கும் நந்தியை தொட்டு வழிபடுவதே தவறு.

23. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

24. பலிபீடத்தை தொட்டு வணங்கக் கூடாது.

25. பலிபீடம், நந்தி, கோபுரம், கொடிமரம் இவற்றின் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துக் கொண்டும் மூலவரை பார்த்துக் கொண்டும், மற்றும் குருவை பார்த்துக் கொண்டும் விபூதியை நெற்றியில் அணியக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பக்தர்கள் தரிசணம் செய்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையூறாக செல்ல கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ, செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. குடும்ப பிரச்சனைகள், வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

36. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

37. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

38. எந்த ஆலயத்திற்கு சென்றாலும் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

39. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

40. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் மட்டுமே கூறி வழிபடுவது சிறப்பு.

41. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.

42. அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

43. கோயிலுக்குச் சென்று வந்ததும், மன திருப்தியாக குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

44. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. இது ஆலயத்தின் புனித தன்மையை கெடுக்கும்.

45. ஆலயத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பின்னரே செல்ல வேண்டும்.

46. ஆலயத்திற்கு சென்றதும் முதலில் நமது சமய சின்னத்தை ( திருநீறு, குங்குமம், சந்தனம் ) நெற்றியில் அணிய வேண்டும்.

47. பூட்டப்பட்டுள்ள ஆலயங்களை வழிபட கூடாது.

48. மாமிசம் சாப்பிட்டு விட்டு ஆலயத்திற்கு செல்ல கூடாது. மாமிசம் வைத்து வழிபடும் ஆலயமாக இருந்தாலும் மாமிசம் சாப்பிட்டுவிட்டு செல்லக் கூடாது.

49. ஆலயத்தில் இறைவனை வழிபடும் போது கண்களை மூடக்கூடாது.

50. ஆலயத்தில் தீப ஆராதனை காட்டும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கவேண்டும்.

51. ஆலயத்தில் வாங்கும் பிரசாதத்தை ஆலயத்திலேயே கொட்டி விட்டு வரக்கூடாது.

52. பிரதோஷ வேளையில் இறைவனுக்கு படைக்கும் உளுந்தை வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post