துர்க்கை அம்மன் வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்க்கை அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :

துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.

மந்திர சாஸ்திரம் எனும் நூல் துர்க்கையை 

1. குமாரி, 
2. த்ரிமூர்த்தி, 
3. கல்யாணி, 
4. ரோஹிணி, 
5. காளிகா, 
6. சண்டிகை, 
7. சாம்பவி, 
8. துர்கா, 
9. சுபத்ரா என்று ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது.

சுவாஸினி பூஜையில், துர்க்கையானவள் 

1. சைலபுத்ரி, 
2. ப்ரம்ஹசாரிணி, 
3. சந்த்ரகண்டா, 
4. கூஷ்மாண்டா, 
5. மகாகௌரி, 
6. காத்யாயனி, 
7. காளராத்ரி, 
8. மகாகௌரி, 
9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகளாக இடம் பெறுகின்றாள்.

அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு ஆடை அம்மனுக்கு அணிவிக்கலாம்.

துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 சுலோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

துர்க்காதேவியை சரணடைந்தால், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் முடியும்.

துர்க்கை வழிபாடு மனத்தெளிவைத் தரும்.

துர்க்கையை வழிபடுபவர்களுக்குப் பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

ஒரு வருடம் துர்க்கையை வழிபட்டு வந்தால் அவனுக்கு முக்தி கிடைக்கும்.

துர்கா தேவிக்கு நீலோத்பவம் மலரை வைத்து வழிபடுவது பல மடங்கு பலனைத் தரக்கூடியது.

துர்க்கையின் முன் புல்லாங்குழல் இசைக்கக் கூடாது.

துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் கூறுபவர்கள் மாயையிலிருந்து விடுபடுவர்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post