பௌர்ணமியும், அதன் சிறப்புகளும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பௌர்ணமியும், அதன் சிறப்புகளும் பற்றிய பதிவுகள் :

பௌர்ணமி நாளில் வீடுகளில் அம்பிகைக்கு தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமி -

சித்ரகுப்தனின் பிறந்தநாள். சித்திரை நட்சத்திரம்.

வைகாசி பௌர்ணமி -

முருகனின் பிறந்தநாள். விசாக நட்சத்திரம்.

ஆனிப் பௌர்ணமி -

இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.

ஆடிப் பௌர்ணமி -

திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.

ஆவணிப் பௌர்ணமி -

ஓணம், ரக்ஷாபந்த திருநாள்.

புரட்டாசி பௌர்ணமி -

உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.

ஐப்பசி பௌர்ணமி -

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.

கார்த்திகைப் பௌர்ணமி -

திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு. கிருத்திகை நட்சத்திரம்.

மார்கழிப் பௌர்ணமி -

சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள். திருவாதிரை நட்சத்திரம்.

தைப் பௌர்ணமி -

சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள். பூசம் நட்சத்திரம்.

மாசிப் பௌர்ணமி -

பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள். மகம் நட்சத்திரம்.

பங்குனிப் பௌர்ணமி -

சிவபெருமான் உமையம்மை திருமண நாள். உத்திரம் நட்சத்திரம்.

ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும். 
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post