துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :

பார்வதியின் ஆங்கார வடிவங்களில் ஒன்றாகத் திகழும் பெண் தெய்வம் துர்க்கை அம்மன் ஆகும். துர்க்கை என்றால் வடமொழியில் யாவராலும் வெல்லமுடியாதவள் என்று பொருள். 

அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிஷாசுரனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிவபுராணத்தின்படி, படைப்பின் ஆரம்பத்தில், ஈசனின் இடப்பாகத்திலிருந்து துர்க்கை தோன்றியதாக கூறப்படுகிறது.

வில்லும் அம்புகளும் :

கையில் இருக்கும் வில்லும் அம்புகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல் சக்திகளையும் கட்டுப்படுத்துவதை குறிக்கும்.

இடியேறு :

கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும்.

பாதி மலர்ந்த தாமரை :

கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, சேருக்கு மத்தியில் பூப்பதை போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மீகத்தை நாட வேண்டும் என்பதை குறிக்கும்.

வாள் :

வாள் அறிவை குறிக்கும். அறிவே இவ்வுலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது.

சுதர்சன் சக்ரா :

உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை, ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கும்.

திரிசூலம் :

திரிசூலம் என்பது சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ் என்ற மூன்று அம்சங்களை குறிக்கும்.

அபாய முத்திரை :

ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபாய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post