ஆடி மாத வெள்ளிக்கிழமையின் மகிமைகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாத வெள்ளிக்கிழமையின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரதமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால், நிச்சயம் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம். இப்போது எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனுக்கு உரியது என்றும், என்ன நன்மைகள் கிடைக்கும்? என்றும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

முதல் வெள்ளிக்கிழமை :

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது சொர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சொர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே, ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையின்போது, சொர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.

இரண்டாம் வெள்ளிக்கிழமை :

ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம்தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையின்போது அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

மூன்றாம் வெள்ளிக்கிழமை :

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே, காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின்போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

நான்காம் வெள்ளிக்கிழமை :

ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின் போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post