தீய ஆற்றலை அழித்திடும் ஸ்ரீ வாராகி வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீய ஆற்றலை அழித்திடும் ஸ்ரீ வாராகி வழிபாடு பற்றிய பதிவுகள் :

எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள் தான் இந்த வாராகி. தீய சக்தி எனும் பேய், பிசாசு, ஏவல், பில்லி இவை அனைத்திற்கும் வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான்.

வாராகி வழிபாடு செய்பவர்களை கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. ஆக இந்த கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை காக்க தான் அன்னைக்கு நாம் இரவு நேர வழிபாடுகளை செய்யவேண்டும்.

வாராகியை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும், விடுபடுகின்றோம். ஜோதிடப்படி இரவு நேர வழிபாட்டின் சூட்சமம் ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி - கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும், நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று அழைக்கப்படுகிறான்.

நீதிமான், இவனே செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் 7 என்ற இவர் காலம் வரும் போது தான். இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப இயலாது. ஒருவனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனி பகவானுக்கு உரியது. ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு, இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே.

வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான்.

இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார். இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி, தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post