காலதேவி ஆலயம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காலதேவி ஆலயம் பற்றிய பதிவுகள் :

காலதேவி ஆலயம் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.

கோயிலில் கோபுரத்தில் "நேரமே உலகம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

காலதேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்று தான்.

பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும், கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைகொடு, இதை கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல், “எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.

இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post