ஓரை என்றால் என்ன

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஓரை பற்றிய பதிவுகள் :

ஹோரை என்பது கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் உரிய நேரங்களாகும். மொத்தம் உள்ள ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களை தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஓரை உண்டு.

ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் சாயா கிரகங்கள் ஆகும். மேலும் இந்த இரு கிரகங்களுக்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தினாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் மற்றும் தொலைவில் இருக்கக்கூடிய கிரகங்கள், அவைகளின் அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

வானவியல் அறிஞர்கள் ஓரைகளை, சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு உருவாக்கினர். இந்த அடிப்படையில் தான் வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன், அதற்கு அடுத்து புதன் ஓரை, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர்வீச்சு தான் காரணம்.

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் அல்லது துவங்குவதற்கும் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. 

சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுவது தான் ஓரைகள் ஆகும். ஒவ்வொரு நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 மணி வரை சந்திரன் ஓரை, 10-11 மணி வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதனை தொடர்ந்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

காலை 6 மணிக்கு வரும் ஓரை, திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும், பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post