அன்னை பார்வதி அனுஷ்டித்த கேதார கௌரி விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அன்னை பார்வதி அனுஷ்டித்த கேதார கௌரி விரதம் பற்றிய பதிவுகள் :

வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி, 21 நாட்கள் விரதத்தை தொடர்ந்து அமாவாசை நாளில் அன்று நிறைவு பெறும்.

21 நாட்கள் உபவாசம் இருந்து முறையாக இவ்விரதத்தினை அனுஷ்டிப்பது சிறப்பாகும். எனினும் உடல் நிலை முடியாதவர்கள் 9 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் இருந்து விரதமிருக்க தொடங்கலாம். அல்லது கடைசி நாள் மட்டும் விரதமிருக்காலம்.

சிவன் பார்வதி ஒன்றாக வீற்றிருக்கும் படம் அல்லது விக்ரகத்தை வைத்து பூக்களால் அலங்கரித்து தீபாதரனை காட்டி நெய்வேத்தியம் படைத்தது பூசை செய்ய வேண்டும். 

அம்பிகையின் நாமங்கள் மந்திரங்களை உச்சரித்து மனதார நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். நெய்வேத்தியங்களை படைக்கும் போது 21 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

காலை, பகல் வேளைகளில் உபவாசம் இருந்து மாலை அம்பாளுக்கு பூசை செய்து வழிபட்டு முடித்த பின்னர் அம்பாளுக்கு படைத்த பிரசாதங்களை உட்கொள்ளலாம். பின்னர் இரவில் இலேசான உணவுகளை உட்கொள்ளலாம்.

ஆண் பெண் இருபாலரும் அனுஷ்டிக்கலாம்.
கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சி அன்னியோன்யம் பெருகும், சிவபெருமானின் பூரண ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைக்கும், வீடடில் லட்சுமி கடாட்சம் பெருகும், நல்ல வாழ்க்கை துணை அமையும். மேலும் ஒரு காரியத்தை மனதில் நினைத்து முழு நம்பிக்கையுடன் விரதமிருந்து கேட்க நினைத்த காரியத்தை அம்பிகை நடத்தி கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

21 நாட்கள் முடிவடைந்த பின்னர், ஆலயத்திற்குச் சென்று அம்பாளின் பூசை அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு வழிபட்டு, 21 முடிச்சுக்கள் போட்ட நூலினை ஆண்களாயின் வலது கையிலும் பெண்களாயின் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு விரதத்தை முடித்து கொள்ளலாம். பின்னர் அன்றைய நாளில் உங்களால் முடிந்தவரை உணவுகள் சமைத்து ஏழை எளியவர்களுக்கு உணவளிபது பெரும் புண்ணியமாகும்.

சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும் என்பதை உணர்த்தும் விதமாக கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டினார் என்கிறது புராண கதை.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. சிவனைக்குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கௌரி விரதம். 

ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.

எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்க வேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். தோஷம் நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் முனிவர். சக்தியின் மனம் ஆறுதல் அடையும் போது சாபம் நீங்கும் என்றார்.அதன் படி சாபம் நீங்கி சிவசக்தியை வழிபட்டார். 

குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும் போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தர வேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகி றது. குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கெளரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான் சக்தியை தன்னில் ஒருபாதியாக சிவன் ஏற்றுக்கொண்டார் என்கின்றன புராணங்கள் அந்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.

கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முடிந்து அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலி யாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.

அம்பிகை சிவனை வேண்டி தவமிருந்த கேதார கௌரி விரதம். இதனை திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் விரதம் இருக்கின்றனர். கேதார கௌரி விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்க ளோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற் கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

அம்பிகை தவ நிலையில் இருந்த விரதம் இது, அவர் இறைவனின் உடம்பில் பாதியை அன்னை பெற்ற விரதம் இது. இந்த விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். இப்போது 21 நாட்கள் பலரால் விரதம் இருக்க முடிவதில்லை. 3 நாட்கள், ஏழு நாட்கள், ஏன் ஒரு நாள் கூட சிலர் விரதம் இருந்து பூஜை செய்கின்றனர்.

இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரிய வேண்டும் என்று சிவபெருமானிடம் அம்பிகை கேட்டுக் கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். 

எனவே ஒற்றுமையுடன் வாழ நினைக்கும் தம்பதியர் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழி யும், நினைத்த காரியம் கை கூடும் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post