அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அமாவாசை வழிபாட்டின் மகத்துவம் பற்றிய பதிவுகள் :

நம்முடைய ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் இருக்கும். 

மேலும், அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பன்று முன்னோர்களை ஆராதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம். 

அதேபோல், அமாவாசை நாள் என்பது, முன்னோர்களுக்கான நாள். அவர்களை ஆராத்தி, வழிபட்டு அவர்களுக்கான நம் கடமையைச் செய்யும் அற்புத நாள். 

இந்த நாளில், நம் முக்கியமான கடமையே பித்ருக்கள் எனப்படும் முன்னோரை வணங்குவதுதான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :

விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவரரி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காளபரமேஸ்வரி.

அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் என்பது தொடர்ந்து நம்பப்பட்டு வரும் ஐதீகம். 

நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post