மதுரை‌ வீரன் வரலாறு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மதுரை‌ வீரன் வரலாறு பற்றிய பதிவுகள் :

மதுரை வீரன் தமிழ்நாட்டவர் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே வணங்கப்படுகிறார்.

மதுரை வீரன்

மதுரை, தமிழ்நாடு, கேரளம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா,இலங்கை போன்ற நாடுகளிலும் வணங்கி வருகின்றனர்.
மதுரை வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரத்திரம் இவர் வீரத்திற்கும் காதலிக்கும் அடையாளமாக இருக்கிறார்.

மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய மீசையுடன் காட்சியளிக்கின்றார்.

வழிபாடு

மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு குறிப்பிடுவதுண்டு.

அருந்ததியர் இனத்தை சேர்ந்த சின்னான், செல்லி தம்பதி வீரனை பெற்றெடுத்து வளர்கின்றனர். திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் அருந்ததியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும்.

காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் அவருடைய மகன் பெரும்படையுடன் மதுரைவீரனை எதிர்க்கின்றனர். அவர் அருந்ததியர்கள் படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றிகொள்கின்றார்,

மதுரையில் திருமலை நாயக்கர் மன்னரிடம் விஷயத்தை தெரிவிக்கின்றார். அன்றைக்கு கள்வர்களால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின, அவர்களை அடக்கமுடியாமல் ராஜ்ஜியங்கள் மிரண்டுஇருந்தன. அந்த நேரத்தில் மதுரைவீரனின் வீரத்தைஅறிந்து திருமலை நாயக்கர் கள்வர்களின் அட்டூழியங்களை அடக்க மதுரை வீரனை பயன்படுத்திக்கொண்டார், 

மதுரைவீரனின் அருந்ததியர் படை மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்கள் கொட்டத்தை ஓடுக்கி மதுரை மக்களை காத்தது. இந்நிலையில் திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் கள்வர்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், இவரின் வீரத்தை அறிந்த புதுக்கோட்டை மன்னர் கேட்டு கொண்டதற்கிணங்க திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அருந்ததியர்கள் படையுடன் சென்று போரிட்டு மக்களுக்கு பெரும்துன்பத்தை கொடுத்துக்கொண்டிருந்த கள்வர்கள் கூட்டத்தை ஒடுக்கி மக்களை பாதுகாத்தார்.

அதனாலேயே தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து ஜாதியினரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் சூதுசெய்து மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனை பிடித்து மாறுகால், மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றனர், நடந்த அநியாயத்தை பார்த்து மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரையை அழிக்க முற்பட்டாள். மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிறங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். 

முதல் பூஜை அவருக்கு நடந்தபின்புதான் மீனாட்சிக்கே பூஜை நடக்கும். மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதை அறிந்த அருந்ததியர் படை மதுரையை துவம்சம் செய்தது. அவர்களிடமும் மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அருந்ததியர்கள் கலவரத்தை கைவிட்டனர் என்பது வரலாறு. கள்வர்களிடம் இருந்து மக்களை பாதுகாத்ததினால் தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து ஜாதியினரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

கதை தொகுப்பு வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் என்ற நூலில் இருந்து.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post