12 ராசிக்காரர்களுக்கான சகஸ்ரநாம அர்ச்சனையும் பலன்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 12 ராசிக்காரர்களுக்கான சகஸ்ரநாம அர்ச்சனையும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

மேஷ ராசி :

மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்குரிய,  

"ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச 
ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் 
தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்"

என்ற ஸ்லோகத்தை 27 முறை கூறி சகஸ்ரநாம் அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.

ரிஷப ராசி :

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலட்சுமிக்குரிய, 

"ஸ்ரீ லக்ஷ்மீம் கமல தாரிண்யைஸிம் 
வரின்யை ஸ்வா"

என்ற ஸ்லோகத்தை தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 

மிதுன ராசி :

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவிற்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விஷ்ணுவுக்குரிய, 

"ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம"

என்ற மந்திரத்தை தினமும் 54 முறை கூறி வந்தால் கஷ்டங்கள் நீங்கும்.

கடக ராசி : 

கடக ராசியில் பிறந்தவர்கள் பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, அம்பாளுக்குரிய மந்திரமான 

"ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம"

என்ற மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் ஏற்படும்.

சிம்ம ராசி :

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, சூரியனுக்குரிய மந்திரமான, 

"ஓம் ரீம் ஸ்ரீம் சூர்யாய நம" 

என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நன்மைகள் ஏற்படும்.

கன்னி ராசி : 

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணு பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விஷ்ணுவுக்குரிய மந்திரமான,

"ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நம" 

என்ற மந்திரத்தை பாராயணம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

துலாம் ராசி : 

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, சத்யநாராயண கடவுளுக்குரிய,

"ஓம் ரீம் ஸ்ரீம் சுக்ராய நம" 

என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் கஷ்டங்கள் விலகும்.

விருச்சிக ராசி : 

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி, 

"தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் 
காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி 
ஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யம்" 

என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் நல்ல பலன் ஏற்படும்.

தனுசு ராசி : 

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து, தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரமான 

"ஓம் ஐம் க்லீம் பிரஸ்பதயே நம"

என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல விதமான நன்மைகள் கிடைக்கும்.

மகர ராசி :

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைதோறும் விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, 

"ஓம் ஐம் ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம"

என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தியாகும். 

கும்ப ராசி : 

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து, ஆஞ்சநேயருக்குரிய மந்திரமான,

"ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம"

என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும். 

மீன ராசி :

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, சிவபெருமானுக்குரிய மந்திரமான,

"ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம"

என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post