ஹோரைகள் முழு விளக்கம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஹோரைகள் பற்றிய பதிவுகள் :

சுபஹோரைகளான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் என்ற நான்கில் அனைத்து சுபவிஷயங்களையும் செய்யலாம். 

மாங்கல்யம் செய்தல், பெறுதல், மாங்கல்யம் தருதல், பூணுதல், பூட்டல் போன்றவற்றை செய்யலாம். 

திருமணம், நிஷேகம், பும்சவனம் என்ற வளைகாப்பு, சீமந்தங்கள், சிசேரியன் ஆப்ரேஷன், குழந்தையை தொட்டிலில் இடுதல், ஜாதகரண நாமகரணங்கள் ஆகியன நடத்த நன்று.

மேலும் குலதெய்வ நேர்ச்சி முடிதருதல், காதுகுத்தல், கல்வி ஆரம்பம், உபநயனம், வாகனம் ஏறல், உழவு செய்தல், எருவிடல், விதை விதைத்தல், கதிர் அறுத்தல், தானியத்தை களஞ்சியம் சேர்த்தல், தானியங்களை செலவிடுதல், வீடு சமபந்தமான வேலைகளை ஆரம்பித்தல், கோவில் திருப்பணிகள் முதலியன செய்யலாம். 

சுபஹோரைகளான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் என்ற நான்கில் அனைத்து சுபவிஷயங்களையும் செய்யலாம்.

வாகன யோகத்தை சுபரான சுக்கிரனே தருகிறார். சனி வாகன அதிபதியாக உள்ளார். இவ்விரண்டு ஹோரைகளும் வாகனயோகம் தருபவை ஆகும். 

குருஹோரை மிக உயர்ந்ததாகும். அடுத்து சுக்கிர ஹோரை உயர்ந்ததாகும். வளர்பிறை சந்திரன் அன்றைய திதிக்கு ஏற்ப நன்மைகள் செய்யும்.

சூரியனும், செவ்வாயும் அடுத்தடுத்து வரும் தீய ஹோரைகள் ஆகும். இந்த அமைப்பு வருகின்ற காலங்களில் புதிய செயல்களை தொடங்கவோ அல்லது செய்யவோ கூடாது.

வாஸ்து புருஷன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எழுகிறான். எனவே வாஸ்து பூஜை செய்ய நல்ல ஹோரை தேவையில்லை.

சூரிய ஹோரை மிக மோசமான ஹோரை ஆகும். அடுத்து சனி ஹோரையும், செவ்வாய் ஹோரையும் கெடுதலை செய்யும் தன்மை உடையதாகும்.

அசுப ஹோரையில் நடந்துவிட்ட சில செயல்களுக்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி அவரது ஸ்லோகங்களை பாராயணம் செய்து வழிபட தோஷம் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post