வாராகி அம்மன் வழிபாடும் பலன்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாராகி அம்மன் வழிபாடும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

வாராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும். 

நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வாராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது?

1. இந்த வாராகி வழிபாட்டை சனிக்கிழமை, சனி ஹோரையில் மேற்கொள்ள வேண்டும்.

2. இந்தப் பரிகாரம் செய்ய வராகி அம்மனின் திருவுருவப் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வாராகித் தாயாக நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்தாலும் கை மேல் பலன் கிடைக்கும்.

3. சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம்.

4. பின் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள்.

5. நிவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

6. உங்கள் கஷ்டத்தை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்விவ்வு கிடைக்கும்.

7. உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வாராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post