சித்திரை மாத சிவராத்திரி

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்திரை மாத சிவராத்திரி பற்றிய பதிவுகள் :

சித்திரை மாத சிவராத்திரியான இன்று ஈசனின் அருளை முழுமையாகப் பெற, சிவராத்திரி வேளையில் சில ஆலயம் சென்று சிவபெருமானை நினைத்து மனதார வணங்க வேண்டும்.

மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவ பெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும்.

சிவராத்திரி அன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.

‘ஓம் சிவசிவ சங்கரா போற்றி!’

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post