ஆங்கில மாதங்களின் பெயர்களும் அவற்றின் விளக்கங்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆங்கில மாதங்களின் பெயர்களும் அவற்றின் விளக்கங்களும் பற்றிய பதிவுகள் :

12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஜனவரி :

ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.

 பிப்ரவரி :

மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது. 

மார்ச் :
 
மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியது தான் மார்ச் மாதம் ஆகும். 

ஏப்ரல் :

ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே :

இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும்.
 
ஜூன் :

ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும். 

ஜூலை :
 
மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார்.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது.

செப்டம்பர் :

ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 

அக்டோபர் :

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது.
 
நவம்பர் :

நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. 

டிசம்பர் :

டிசம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான டிசம் என்றால் பத்து என்று அர்த்தம். இதனால் டிசம்பர் என்று அழைக்கப்பட்டது. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், பன்னிரென்டாம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post