ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி பற்றிய பதிவுகள் :

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; 
ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை.'

விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். நாளை விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'பரிவர்த்தினி ஏகாதசி' என்றும் 'வாமன ஏகாதசி' என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது.

பொதுவாகவே ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது. அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. 

இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

Post a Comment

Previous Post Next Post