நவராத்திரி வாராஹி மற்றும் சந்திரகாந்தா வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி வாராஹி மற்றும் சந்திரகாந்தா வழிபாடு பற்றிய பதிவுகள் :

வாராஹி தேவி, அம்பிகையின் போர் படை தளபதியாக இருந்து அம்பிகைக்கு வெற்றியை தேடித் தந்தவள். பன்றியின் முகமும், பெண்ணின் வடிவமும் கொண்டு விளங்குகின்ற வாராஹி கருணையே வடிவானவள். 

இவளை நவராத்திரியின் மூன்றாம் நாளில் குங்குமம், செண்பக மலர், சம்பங்கி மலர் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து, கோதுமையால் செய்த உணவுகள், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும். 

வாராஹியை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனை தீரும். எதிரிகளை வீழ்த்தி, தடைகள் விலகி, வெற்றிகள் குவிய இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு. வாராஹி அம்மன் வழிபாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பலரின் இஷ்ட தெய்வமாகவும் வாராஹி இருந்து வருகிறாள்.

நவதுர்க்கை வழிபாடு

துர்க்கையின் வடிவம் - சந்திரகாந்தா
நிறம் - சாம்பல்
நைவேத்தியம் - இனிப்பு அல்லது குங்குமப்பூ கலந்த பால் பாயசம்
மலர் - தாமரை அல்லது ரோஜா
பழங்கள் - உலர் பழங்கள்

சந்திரகாந்தா அல்லது சந்திரகாண்டா என அழைக்கப்பட்டும் துர்க்கையின் வடிவமான இந்த தேவி, நெற்றியில் பிறை நிலவை சூடியும், கையில் மணி ஏந்தியம் இருப்பதால் இவளுக்கு சந்திரகாண்டா என்ற தஇருநாமம் ஏற்பட்டது. 

இவளின் தலையில் இருக்கும் பிறை, ஞானத்தையும் மன அமைதியையும் தரக் கூடியது. இவள் வரும் போது எழும் மணியின் ஓசை வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தையும் விரட்டக் கூடியதாகும். 

சிங்கத்தை வாகனமாகக் கொண்ட இந்த அம்பிகை, சிவனை மணம் புரிந்த பிறகு அவரின் பிறை நிலவை தன்னுடைய நெற்றியில் சூடிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. 

இவள் பத்து திருக்கரங்களுடன், அவற்றில் பலவித ஆயுதங்களையும், அதோடு தாமரை மலரையும் தாங்கி காட்சி தருகிறாள். இவள் பக்தர்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவள்.

Post a Comment

Previous Post Next Post