நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பற்றிய பதிவுகள் :
பாலா என்றால் சிறு குழந்தை. ஆதிபராசக்தியே தனது 9 வயது குழந்தை வடிவில் தோன்றியவள் தான் பாலா திரிபுரசுந்தரி. பாலா. காமாட்சி. ராஜ ராஜேஸ்வரி லலிதா யாவரும் ஒன்றே, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் "பாலா" என்பது முதல் மந்திரம். அனைத்து சக்திகளுக்கும் மூலமானவள்.
லலிதாம்பிகை பண்டாசுரனுடன் யுத்தம் செய்தபோது, அவன் 30 மகன்களை அழிக்க தன்னிடமிருந்து தோற்றுவித்த குழந்தை தெய்வமே பாலா. சிறு குழந்தை போல் இருந்தாலும், அளவிட முடியாத சக்தி கொண்டவள்.
தோற்றம்:
- நான்கு திருக்கரங்கள்
- கரும்பு வில், மலர் அம்புகள், பாசம், அங்குசம் ஏந்தியவள்
- செம்பட்டு உடுத்தி, சிறு குழந்தை போல் புன்னகைக்கும் முகம்
- சிவப்பு நிறம் கொண்டவள், தாமரை மீது அமர்ந்தவள், இவளை வழிபட பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்கவோ , இவளை பற்றி அறியாத முடியும் என்கிறார்கள் சித்தர்கள்.
மகிமைகள்:
குழந்தை வரம்:
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பாலாவை வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
கல்வி, ஞானம்:
பால சரஸ்வதியின் அம்சம். குட்டி லலிதாம்பிகை, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, பேச்சுத்திறன், ஞாபக சக்தி அருள்பவள். பாலா மந்திரம் ஜெபித்தால் திக்குவாய் நீங்கும்.
திருமண தடை நீங்கும்:
திருமணம் தடைபடுபவர்கள், ஆறு வெள்ளிக்கிழமை, அல்லது தாங்கள் பிறந்த திதி நாள், அல்லது பெளர்ணமி திதியில் பாலாவிற்கு செம்பருத்தி அல்லது சிவப்பு நிற மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்யம் பெற மாவிளக்கு தீபம் ஏற்றி பால்தான் செய்து வர சந்தான பாக்யம் கைகூடும்.
எதிரிகள் தொல்லை நீங்கும்:
பாலா மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எதிரிகள், தீய சக்திகள், செய்வினை, திருஷ்டி அனைத்தையும் விலக்குவாள்.பாலாம்பிகையே உண்மை பிரேமையோடு வழிபடுபவர்க்கு வாராகியும், மாதங்கியும் உடனே தேடி வந்து அருள்வார்கள்,
பாலா மூல மந்திரம்:
ஓம் ஐம் க்லீம் சௌஹ் சௌஹ் க்லீம் ஐம்
இந்த மந்திரத்தை பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை மடியில் வைத்தும், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி சந்நிதியில் அமர்ந்து மூலமந்திரத்தை பரிபூரணமாக பிரேமையோடு சொல்லி வந்தால் அம்பாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.