வியாழக்கிழமை தோறும் செய்ய வேண்டிய குபேர லட்சுமி பூஜை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வியாழக்கிழமை தோறும் செய்ய வேண்டிய குபேர லட்சுமி பூஜை பற்றிய பதிவுகள் :

பணத்திற்கு உரிய கடவுள் குபேரன் ஆவார். இது பலரும் அறிந்ததே. இவர் மட்டும் தான் அனைத்து தெய்வங்களின் பணத்திற்கும் பாதுகாவலனாக இருக்கிறார்.குபேரரை நாம் வணங்கி வந்தால் நமக்கிருக்கும் பண கஷ்டங்கள் தீர்ந்து, அள்ள அள்ள குறையாத செல்வம் சேரும். அதுபோல குபேர கடவுளை வணங்கும் பொழுது நோய் நொடியற்ற செல்வம் வேண்டும் என்று வணங்க வேண்டும். 

இப்படி செல்வங்களை அள்ளித் தரும் குபேர கடவுளை வழிபடுவதற்கு என்று சரியான வழிமுறை இருக்கிறது. இதனை பற்றி அறியாதவர்கள் எப்படி எளிமையாக குபேர லட்சுமி பூஜையை செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் லட்சுமி அம்மன் எப்படி உருவாக்கினார் என்பதை தெரிந்து கொள்வோம். தேவர்களும், அசுரர்களும் பார்கடலை கடையும் பொழுது இந்திரனுக்கு அடுத்தபடியாக தோன்றியவர் தான் லட்சுமி. சந்திரனுக்கு எப்படி பாதி நாட்கள் தேய்கின்ற குணமும், பாதி நாட்கள் வளர்கின்ற குணமும் இருக்கிறதோ அதுபோலவே மகாலட்சுமி தேவிக்கும் நினைத்த நேரத்தில் நினைத்த படி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் உள்ளது.

எனவே நமது வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி தேவியின் எண்ணம் நமது வீட்டைவிட்டு போகாதபடி எப்பொழுதும் இந்த குபேர பூஜையை தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு 5 என்பது குபேரருக்கு உரிய எண்ணாகும். எனவே தான் அனைத்து நாடுகளிலும் ஐந்து ரூபாய் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும்.

பச்சை நிறம் என்பதும் குபேரருக்கு மிகவும் உரித்தானதாகும். அதுபோல குபேரனின் வாகனம் கீரியாகும். பணம் இருக்கும் இடத்தில்தான் பிணியும் வந்து சேரும். எனவேதான் பாம்பின் விஷத்தை முறிக்க வல்ல திரியை வாகனமாக வைத்துள்ளார் குபேரர். எனவே குபேரனை வணங்கும் பொழுது நோய் நொடியற்ற செல்வம் வேண்டும் என கேட்க வேண்டும்.

இவ்வாறு குபேரலட்சுமியை சேர்ந்து வணங்கும் பொழுது அளவற்ற செல்வமும், அதிர்ஷ்டமும் வந்தடைகிறது. இவ்வாறு வியாழக்கிழமை தோறும் இந்த பூஜையை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் மட்டும்தான் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த பூஜை உங்களுக்கு நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும்.

இதற்காக முதலில் உங்கள் வீட்டு நிலை வாசலில் வலதுபுறம், வடக்கு திசை நோக்கி, மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த குபேர விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, ஐந்து கற்கண்டுளை சேர்த்து, திரி போட்டுத் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். ஏனென்றால் குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் ஆகும். அவரது பற்கள் மிகவும் மென்மையானதாக இருப்பதால் அவர் அவலை மிகவும் விருப்பமாக சாப்பிடுவார். இவ்வாறு தீபம் ஏற்றி குபேர லட்சுமி ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post