ஜாதகத்தில் சூரிய திசை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய திசை பற்றிய பதிவுகள் :

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடிய சூரிய பகவான், தனது திசை காலத்தில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகிறார். சூரிய திசை 6 வருடங்களாகும். மிக குறுகிய காலமாக திசை நடத்தும் கிரகம் சூரியன் மட்டும் தான். 

 சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம், அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம், சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.

 அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு, பொருளாதார ரீதியாக மேன்மைகள், பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும் அக்கிரகங்களின் சாரம் பெறுவதும் சிறப்பான பலனை உண்டாகும்.

 சூரிய பகவான் பலவீனமடைந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இருதய நோய், உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள், வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

 சூரிய திசை நடைபெறும் காலங்களில் சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் கெடுதல் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post