வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் திருத்தலங்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் திருத்தலங்கள் பற்றிய பதிவுகள்:

காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோவிலில், மூல விக்கிரகம் கிடையாது. உற்சவர் விக்கிரகமே மூலவராக வழிபடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அருகில் உள்ளது பராஞ்சேரி. இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.

திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் சக்தியாக, ‘பிரம வித்யாம்பிகை’ என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார்.

மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் துர்க்கை அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னிதி மலை அடிவாரத்திலும், கனககிரீஸ்வரர் சன்னிதி மலைக்கு மேலேயும் அமைந்திருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முருகப்பெருமானின் தலையை தடவிய நிலையில் நீலோத்பலாம்பாளையும், கால்மேல் கால்போட்ட கோலத்தில் கமலாம்பாளையும் தரிசிக்கலாம்.

திருவெண்காட்டில் உள்ள புதன் தலத்தில், திருஞானசம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்த நிலையில் பெரியநாயகி அம்மன் காணப்படுகிறாள்.

சென்னை திருப்போரூர் அருகில் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி தனித்திருத்தலம். திதி படிமேல் ஔஷத லலிதா மகா திரிபுரசுந்தரி விஸ்வரூப மூலிகை அம்பாள். வருடத்திற்கு நான்கு நவராத்திரி விழா நடைபெறும் ஆலயம்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி ஆலயத்தில், லிங்கத்தின் பாணத்தில் அம்மன் வடிவம் காணப்படுகிறது. இதனை ‘அர்த்தநாரீஸ்வர லிங்கம்’ என்கிறார்கள்.

கும்பகோணம் அய்யவாடி பிரத்தியங்கிரா ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post